இரத்தினபுரியில் மாமியாரை படுகொலை செய்த மருமகன் கைது
இரத்தினபுரியில் தனது மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் இரத்தினபுரி - டிப்போ சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(03.08.2025) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
74 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி - டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான 29 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
