3 வயது மகன் மீது கொதிநீரை ஊற்றிய கொடூரம்: தந்தை கைது
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் மூன்று வயது ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றி கொடூர செயலில் ஈடுப்பட்டவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவதடதுடன் தொடர்புடைய சந்தேக நபரை நேற்று (25.07.2023) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொடூர சம்பவம் (24.07.2023) இரவு லிந்துலை பொயாவெல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கொழும்பில் பணிப் பெண்ணாக தொழிலாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் தனது பாட்டி,மற்றும் தந்தையின் அரவணைப்பில் வசித்து வருகின்றனர். சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு குழந்தையின் தந்தை மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வருகை தந்திருந்த போது குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
இதன் போது தனது கடைசி குழந்தையான மூன்று வயதான ஆண் குழந்தை மீது கொதிநீரை ஊற்றியுள்ளார். இதனால் துடி துடித்த குழந்தையின் முதுகு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நீர் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன்,தனது பாட்டியின் பாதுகாப்பில் குழந்தை சிகிச்சைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் தகவல் அறிந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய தந்தையை நேற்று மாலை கைது செய்துள்ள பொலிஸார் இன்று (26.307.2023) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
