சஜித் கட்சிக்குள் தீவிர முரண்பாடு : அதிருப்தியில் சிரேஷ்ட உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவில் இருந்த ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றோர் அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே தமது அதிருப்தியை ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் ஆலோசனை
அரசியல் செயற்பாடுகளின் போது பீரிஸ் மற்றும் பொருளாதார விவகாரங்களில் நாலக கொடஹேவா போன்றோரின் அரசியல் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளித்து சஜித் பிரேமதாச செயற்பட்டு வந்துள்ளார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவை வளர்த்தெடுப்பதிலும், கட்சியின் பொருளாதார கொள்கைககளை வகுப்பதிலும் இதுவரை காலமும் முன்னணியில் நின்ற கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன போன்றோர் இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் கலகக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும், மொட்டுக் கட்சிக்காரர்களுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய ஊடகங்கள் சிலவும் செய்தி வௌியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |