யாழில் வீடொன்றிற்குள் நுழைந்து அடையாளம் தெரியாதவர்களால் தாக்குதல்
யாழ். (Jaffna) பொன்னாலையில் உள்ள வீடொன்றிற்குள் அடையாளம் தெரியாத இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி உள் நுழைந்து வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொன்னாலை - மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்க கணக்கினை வெளிப்படுத்துமாறு பொன்னாலை பகுதியில் வசித்து வரும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர், சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இந்நிலையில், தொடர்ச்சியாக கணக்கறிக்கை வெளியிடப்படாத நிலையில் இது தொடர்பில் முகநூலில் குறித்த கணக்கினை பகிரங்கபடுத்துமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (02) மாலை வேளை குறித்த உப தலைவரின் இல்லத்திற்கு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் நிலையில் வீட்டிலிருந்தோரை தாக்கமுயன்று தகாதவார்த்தைகள் உபயோகித்து சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த உப தலைவர் குடும்பத்தினரால் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |