சில அமைச்சர்கள் துன்புறுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு
சில அமைச்சர்கள் தம்மை துன்புறுத்துவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்கிக்குள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள தலைவர்களுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள், பிரதேச அரசியல்வாதிகளின் ஊடாக தமக்கு சில சில துன்புறுத்தல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆளும் கூட்டணிக்குள் அண்மைய நாட்களாக பல்வேறு முரண்பாட்டு நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.