திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி!
தமிழ் நாட்டின் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் 15 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டும் வயிற்றைக் கத்தியால் கீறியும் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருச்சி சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக தமக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளதால், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தொடர் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
