வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
வவுனியா வடக்கு பிரதேச சபை நிர்வாகத்தை முரண்பாடுகளின்றி கொண்டு செல்வது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச சபையை நிர்வகிக்கும் கட்சிகளின் உடைய பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடிய இருந்தோம்.
பிரச்சினைகள்
கடந்த 4 மாதமாக சபையை நடத்தும் போது எதிர்நோக்கும் பட்ட பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டது.
இதில் பல விடயங்கள் கட்சிகளினால் உம் உறுப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டது. அதனை ஆராய்ந்து இப் பிரதேச சபையை மக்களுக்கு பயனுள்ள வகையில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என கலந்துரையாடினோம்.
குறிப்பாக வடக்கில் வவுனியா வடக்கு பிரதேச சபை என்பது எமது மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடுகளை கொண்ட பிரதேசங்களை கொண்டது.
வெளி நடப்பு
நாங்கள் தமிழ் மக்களுடைய நன்மை கருதி இதனை சிறப்பாக கொண்டு நடத்துவது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தவிசாளருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்களே வெளி நடப்பு செய்தமை தொடர்பிலும் பேசப்பட்டது.
சுமுகமான நிலை தான் தொடர்ந்து இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை. அவ்வாறு எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நிர்வாகத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது! தேவானந்த சுரவீர எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
