வட்டி வீதங்கள் எப்படி உள்ளன? இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்
இலங்கைக்குள் முதலீடுகளை செய்யும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலைமைக்கு இலங்கை மத்திய வங்கி வந்துள்ளதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வணிக தொலைக்காட்சி ஒன்றுடன் இன்று இடம்பெற்ற நேரடி உரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டின் அனைத்து பிணைமுறி நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.வட்டி வீகிதங்கள் நடுதர மட்டத்தில் இருந்து வருகிறது. அண்மைய காலத்தில் சிறந்த பங்கு பரிமாற்றங்களை இலங்கை பங்குச்சந்தை காண்பித்துள்ளது.
இலங்கை்கு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன் வங்கித் துறையில் சாதாரண நிபந்தனைகள் சிறந்த மட்டத்தில் உள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் சிறந்த நம்பிக்கை கொள்ள முடியும்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமான சமிக்ஞையும் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆலோசனைகளுக்கு இணையாக அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது எனவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.