சிலர் மனித உரிமை ஆணைக்குழு செல்ல காத்திருக்கின்றனர்! - ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்
அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சிலர் காத்திருக்கின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கண்ணீர் புகைக் குண்டு அல்லது குண்டாந்தடிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர் எப்படியாவது அரசாங்கத்திற்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவே காத்திருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை தடுக்க பொலிஸார் தேவையின்றி தடைகளை ஏற்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டங்களை தடுத்த நிறுத்த பொலிஸார் முயற்சிக்கும்போதும் பிரச்சினைகள் எழும் என தெரிவித்துள்ளார். மேலும் சேதன பசளை பயன்படுத்தும் விவசாயிகளை அரசாங்கம் ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
