தடுப்பூசி தொடர்பாக சுகாதார அதிகாரிகள் எடுத்த சில தன்னிச்சையான முடிவுகள்! - சுதர்ஷினி
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் எடுத்த சில தன்னிச்சையான முடிவுகள் குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள் மீது ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
முன் அறிவிப்பின்றி முடிவுகள் எடுக்கப்படும்போது தடுப்பூசி செலுத்துவது கடினமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில முடிவுகள் நள்ளிரவில் மாற்றப்பட்டன. சில முக்கியமான முடிவுகள் முறையாக தெரிவிக்கப்படவில்லை.
தடுப்பூசி கொடுக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட முறை இருக்கவேண்டும், சுகாதார அமைச்சு அதைச் செய்து வந்தது. இருப்பினும், அத்தகைய நடைமுறையை இப்போது காணவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கோவிட் நோய்க் கட்டுப்பாட்டின் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சில கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை. அத்துடன் சில முக்கிய முடிவுகள் கூட அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
