சோமரத்ன ராஜபக்சவிற்கு ஆபத்து ஏற்பட்டால் அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு!

Jaffna Northern Province of Sri Lanka chemmani mass graves jaffna
By Kajinthan Aug 05, 2025 10:02 AM GMT
Report

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையப்போகும் மற்றுமொரு சலுகை

அகழ்வு பணிகள்

சோமரத்ன ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் போகம்பரை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்சவை சந்தித்து அவரிடம் பல விடயங்களை கேட்டறிந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அது தொடர்பான நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது இவ்வாறு இருக்கையில் சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.

சோமரத்ன ராஜபக்சவிற்கு ஆபத்து ஏற்பட்டால் அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு! | Somaratne Rajapaksa Anura S Reign Gowthaman

ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ச மட்டுமே உள்ளார். செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது, உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர். எனது கருத்தும் காணாமல் ஆக்கப்பட்டோடரது உறவினர்களின் கருத்துகளோடு இணங்குகின்றது.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு.

மன்னாரில் கடையடைப்பு: காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

மன்னாரில் கடையடைப்பு: காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம்

அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார். சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்திலேயே பல மர்ம முடிச்சுகள் அவிழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. செம்மணி புதைகுழி குறித்து நீதியோடும், நியாயத்தோடும் செயல்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் செம்மணி விவகாரம் காணப்படுகின்றது.

சோமரத்ன ராஜபக்சவிற்கு ஆபத்து ஏற்பட்டால் அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை: கௌதமன் தெரிவிப்பு! | Somaratne Rajapaksa Anura S Reign Gowthaman

இவ்வாறான சூழ்நிலையில் அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த முன்வரும் சோமரத்ன ராஜபக்சவை காப்பாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும். யுத்தத்தின் போது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈழத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவற்றினை தென்னிலங்கை தரப்புகள் தொடர்ச்சியாக மறுத்து வந்ததே வரலாறு.

இன்று அவர்களது பகுதியில் இருந்தே ஒருவர் வாக்குமூலம் அளிக்க முன்வருகின்றார். அவர் தன் சார்ந்த முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்படும் சூழலில், வடக்கில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதனை தென் இலங்கை சமூகமும் அறிந்துகொள்ள முடியும். காலம் கனிந்து வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற இருப்பதால் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்போதாவது ஓரணியில் திரளுங்கள்.

கருத்து முரண் இல்லாமலும் தனி நபர் காழ்ப்புணர்ச்சியற்றும் ஒருமித்த குரலில் எம் மக்களது பேரிழப்பை, பெரும் வலியினை சர்வதேச அரங்கில் எடுத்துரையுங்கள். படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ தரப்பில் இருந்தே அதற்கான சாட்சியும் தற்போது கிடைத்திருக்கின்றது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது ஒரு வரலாற்று தவறு மட்டுமல்லாது விடிவுக்காக போராடும் தமிழ் இனத்துக்கே நீங்கள் செய்யும் ஆகப்பெரும் துரோகமாக பார்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US