பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இதுவே தீர்வு – திகாம்பரம்
தோட்டங்களை பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் சம்பளப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை எட்ட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட காணிகளை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து அவர்களையே தேயிலை கொழுந்து வழங்குமாறு கோருவதே சிறந்த தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட கம்பனிகளுக்கு தேயிலை விற்பனை செய்வதன் மூலம் தொழிலாளர்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபா வருமானம் ஈட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகள் தொழிற்சாலைகளை நடாத்திச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் தோட்ட பராமரிப்புச் செலவுகளை நிறுவனங்கள் தவிர்க்க முடியும் எனவும் தெற்கில் இந்த நடைமுறை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவன் தொண்டமான் தந்தையின் மறைவு காரணமாகவே அமோக வெற்றியீட்டினார் எனவும், அனுதாப வாக்குகள் இந்த வெற்றியில் குறைவாகவோ, கூடுதலாகவோ தாக்கத்தை செலுத்தியது என்பதனை மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் போட்டியிட்டிருந்தாலும் தாம் 83000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.



