கப்பல் துறை கண்ணகி அம்மன் ஆலய வீதி தடைக்கு தீர்வு
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயத்துக்கான வீதி தடை தொடர்பில் அண்மையில் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன.
இந்த நிலையில், நேற்று(17) திருகோணமலை பிரதேச செயலாளர் தலைமையில், துறைமுக அதிகாரசபை உயர் அதிகாரிகள் மற்றும் சூரியசக்தி மின்சார உற்பத்தித் திட்ட அதிகாரிகள் முத்துநகர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வீதி தடை
அத்துடன், கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபை தலைவர் பொ.பற்குணராசா தலைமையிலான நிர்வாக குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, பாதை வசதி இல்லாத காரணத்தால் சிக்கலில் இருந்த “கப்பல்துறை கண்ணகி அம்மன்” ஆலயத்துக்கு, தடையின்றி செல்லக்கூடிய புதிய பாதை அமைக்கப்பட வேண்டிய பகுதி தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, ஆலயத்துக்கான புதிய பாதை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாதை அமைப்பு பணிகள் அதிக செலவுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆலயத்தின் பாதை பிரச்சனையை வெளிக்கொணர உதவிய ஊடகங்கள் மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஆலய நிர்வாகமும் பக்தர்களும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வரும் ஆனி மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, குறித்த சூரியசக்தி மின்சாரத் திட்டம் காரணமாகவே ஆலயத்துக்கான பழைய வீதி தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam