கொட்டடி கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு..!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்க்கன முத்தரப்பு சந்திப்பு ஒன்று இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது.
பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை தவிசாளர், உப தவிசாளர் கொட்டடி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற கூட்டத்தில் கொட்டடி கடற்றொழிலாளர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் அதிகாரிகள் தீர்மானிக்கின்ற இடத்தில் மீன்பிடி துறை அகழும்போது குவிக்கப்பட்ட மணல்மண்ணை கொட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம்
பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற முத்தரப்பு உரையாடலை அடுத்து பருத்தித்துறை கொட்டடியில் துறை அகழ்ந்த இடத்தை பார்வையிட்ட கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், பருத்தித்துறை நகர சபை அதிகாரிகள், கடற்றொழில் அழைச்சின் தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் குறித்த துறை அகழ்ந்து மண்ண கொட்டுவதற்குரிய இடத்தினை அடையாளப்படுத்தினர்.

குறித்த துறை அகழப்பட்ட மண் அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொட்டடி கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிட தக்கது.