கந்தளாய்- பேராறு பகுதியில் நீடித்த வடிகால் பிரச்சினைக்கு தீர்வு
கந்தளாய்- பேராறு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடுமையான வடிகால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், கந்தளாய் பிரதேச செயலகத்தினால் முப்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச செயலாளர் சுவர்ணா பெரேரா கடந்த அக்டோபர் 8ஆம் திகதி அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆய்வு செய்தார்.
இந்த விஜயம், கந்தளாய் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவர் ஏ.ஐ. . சலீமுல்லாஹ் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.
வேலைத்திட்டம்
அதன் பின், செயலகத்தினால் முப்பது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு, தற்போது வடிகால் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக பேராறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்பட்ட முறையற்ற வடிகால் அமைப்பினால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுதல் போன்ற பெரும் சிரமங்களை அந்தப் பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.
இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
