பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்புக்கு தீர்வு: டக்ளஸ் தேவானந்தா (Photo)
பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக, தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மயிலிட்டி துறைமுகத்திற்கு நேற்று (02.11.2022) விஜயம் மேற்கொண்ட போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி குறித்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாழில் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக நேற்று (02.11.2022) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூகத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
