பண்ணையாளர்களுக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்: இரா.சாணக்கியன்
மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்மானித்ததின் அடிப்படையில் ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் சாணக்கியன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவரது விமானம் தாமதமானதால் அவரால் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரியவருகிறது.
ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விடயம்
இந்த நிலையில் இன்று (04.10.2023) ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன் கடந்த 20 தினங்களாக வீதி ஓரமாக இருக்கும் பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி, தனது செயலாளர் ஏக்கநாயக்காவிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக உடன் கவனம் எடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் ஐ.ஜி.பிக்கு குறித்த பண்ணையாளர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதுடன், அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஜனாதிபதியின் கருத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் எந்த விடயம் சாத்தியப்படுமோ அதற்கு ஏற்றவகையில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

சினிமா வரலாற்றில் சம்பள விஷயத்தில் புதிய முயற்சி எடுத்துள்ள நடிகை சமந்தா.. குவியும் வாழ்த்து Cineulagam
