டெங்கை ஒழிக்க கிழக்கில் விசேட வேலைத்திட்டம்
கிழக்கு மாகாணத்தில் பெய்து வருகின்ற தொடர் மழையை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற டெங்கு ஒழிப்பு சிரமதான வேலை திட்டம் இன்றும் (26) கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது தேசிய ரீதியில் இடம் பெற்று வரும் தேசிய நிகழ்வாக இருக்கின்ற டெங்கு கட்டுப்பாட்டு செயல் திட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றது.
கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனை
இன்றைய போது கிண்ணியா சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்தியர் மற்றும் பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் சகிதம் டெங்கு ஒழிப்பு சிரமதான பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மைய அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri