பெல்ஜியம் தொடருந்து விபத்தில் நால்வர் பலி !
பெல்ஜியம் நாட்டின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் (East Flanders) மாகாணத்தில் உள்ள பக்கன்ஹவுட் (Buggenhout) நகரில் இடம்பெற்ற ஒரு பயங்கர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தானது இன்று( 26.05. 2026) காலை இடம்பெற்றுள்ளது.
நால்வர் உயிரிழப்பு
அங்குள்ள தொடருந்து கடவை (level crossing) ஒன்றில் சென்று கொண்டிருந்த பள்ளி மினிபஸ் மீது தொடருந்து ஒன்று மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மினிபஸ்ஸில் ஒரு ஓட்டுநர், ஒரு உதவியாளர் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட (special needs) மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேர் பயணித்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரில் இருவர் சிறுவர்கள், மற்ற இருவர் மினிபஸ்ஸின் ஓட்டுநரும் உதவியாளரும் ஆவர்.
விபத்து நடந்த நேரத்தில் தொடருந்து கடவையின் பாதுகாப்புத் தடைகள் (barriers) மூடப்பட்டிருந்ததாகவும், சிவப்பு விளக்கு எறிந்திருந்ததாகவும் தொடருந்து கட்டமைப்பு நிறுவனமான இன்ஃப்ராபெல் (Infrabel) தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 10 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam