தூக்க கலக்கத்தில் புகையிரத நிலையத்தில் இறங்கிய சிப்பாய் படுகாயம்
தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால், மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(17) நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாண புகையிரத நிலையம்
குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு -யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இறங்க வேண்டியவர், தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார்.
காயமடைந்த ராணுவ சிப்பாய்

திடீரென தூக்கத்தினால் எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து , தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய
சாலையில் அனுமதித்துள்ளனர்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam