லண்டனில் இளம் இராணுவ வீரர் சடலமாக மீட்பு
லண்டனில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் 18 வயதான இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக் பர்னெல்-வில்லியம்ஸ் என்ற இளம் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, அவர் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அரசு இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவ செய்தித் தொடர்பாளர்,
மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை
இந்த கடினமான நேரத்தில் இராணுவ வீரரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தமது ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை.
அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கு மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
