கிராமப் புறங்களில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
கிராமப் புறங்களில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
சூரிய மின் தகடுகள் நிறுவும் திட்டம்
குறித்த பதிவில்,
கிராமப் புறங்களில் இவ்வாறு அமைக்கப்படும் 25 ஆயிரம் விடுகளிலும் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
A project for 25,000 new rural houses with roof top solar by a private investment in a partnership with the Housing & Urban Development Ministry was discussed this morning. The investment plans to construct new housing for low income families & install roof top solar selling to… pic.twitter.com/xjgthaqftJ
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 27, 2023
அதேநேரம் குறித்த சூரிய மின் தகடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
