கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி நேற்றைய தினம் (15) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளிடம் இருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட செம்மன்குன்று பகுதியிலேயே இந்த பணி ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னெடுக்கப்படும் பகுதிகள்
இந்த திட்டமிடமானது, வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் அதற்குள் அடங்குகின்றன.
மேலும், இந்த நிகழ்வில், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
