சோசலிச சமத்துவ கட்சியின் தலைவர் விஜே டயஸ் காலமானார்
மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியும், சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான விஜே டயஸ் தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் மாரடைப்பு காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஜூலை 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சிக்கும், ஒட்டுமொத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் மற்றும் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் இவரின் மறைவு பேரிழப்பு எனவும் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இறுதிக்கிரியை தொடர்பான தகவல்
மறைந்த விஜே டயஸின் பூதவுடல் பொரளை மயான வீதியில் உள்ள ஜயரட்ன ரெஸ்பெக்ட் ஹோம் மலர்சாலையில் ஜூலை 28 வியாழன் காலை 9 மணி முதல் ஜூலை 30 ஆம் திகதி சனிக்கிழமை வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து இறுதி ஊர்வலமாக சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பொரளை மயானத்திற்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் அஞ்சலி கூட்டம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.