மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு
கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சிரமதான செயற்திட்டம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிரமதான நடவடிக்கை மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் இன்றையதினம் காலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் அனுசரணையில் மன்னார் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு கடற்கரை பகுதி வரை இந்த சிரமதான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சாந்திபுரம், கீரி, தாழ்வுபாடு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் செளத்பார் கடற்கரை தொடக்கம் தாழ்வுபாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் வரையிலான கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டதுடன் அனைத்து கழிவுகளும் நகரசபையின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மன்னார் பிரதேச செயலக
பிரிவில் உள்ள கடற்கரை பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.









கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam