போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டம்!
போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப்பதில் அவர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான கைது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான செயல்முறைகளில் காணப்படும் தாமதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மறுவாழ்வுத்திட்டம்
குறிப்பாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சந்தேகநபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், இதனால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதுடன் மட்டுப்படாமல், கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவதாக கூறிய அநுர தரப்பு! 24 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்கும் அரசியல்வாதி