சமூக ஊடகங்கள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்: நிமால் சிறிபால டி சில்வா
சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதங்களில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தெரிவு செய்யப்பட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களினால் கலாச்சாரத்திற்கும்,சமூகத்திற்கும் ஏற்படக்கூடிய அழிவுகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டுமென கோரவில்லை என்ற போதிலும் அவற்றை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அங்கிருந்து போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதாகவும் இலங்கையிலும் ஏன் மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.



