பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா வழங்கப்பட வேண்டும்: சிவில் அமைப்புகள் (Photos)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து நேற்று (07.10.2022) அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ''மலையக மக்களுக்கான சமூக நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது.
இந்நிலையில் கல்வி, காணி, பொருளாதாரம் என மிக முக்கியமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
சமூக நீதி மீறப்படல்
மலையகத் தமிழர்களும் ஓர் தேசிய இனத்துக்குரியவர்கள். அவர்களுக்கான சமூக நீதி மீறப்படுகின்றது. கல்வி உரிமை, காணி உரிமை, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
எதையும் போராடியே பெற வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலைமை நீடிப்பதை அனுமதிக்க முடியாது.
அந்நிய செலாவணி
நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கின்ற மலையக பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கும், தொழில் இல்லாதவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும்.
உற்பத்திக்காக நிலங்களை வழங்கலாம் என ஜனாதிபதி முன்மொழிவு செய்திருந்தார். ஆனால் இதற்கு மாறாக தோட்ட கம்பனிகள் செயற்படுகின்றன" என தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர்
எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர்
இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ்
பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர்
மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



