வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட 6 பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்றிரவு வெளியாகிய நிலையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியாவில் இன்று 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை, வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையயை சேர்ந்த 21 பேர் இதுவரை கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
