நுவரெலியா நகரில் பூப்பனி பொழிவு
நுவரெலியா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களில் இன்று அதிகாலை பூப்பனி பெய்திருந்ததாக நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குதிரை பந்தய திடல்
நுவரெலியா குதிரை பந்தய திடல், கிரகறி குளம் பூங்கா, கோல்ப் மைதயானம் ஆகிய இடமங்களிலும் பூப்பனி பெய்திருந்தது.
அத்துடன் கந்தபொல, மிபிலிமான பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் சிறிதளவு பூப்பனி பெய்திருந்ததை காணமுடிந்துள்ளது.
அதிகாலையில் பனிப்பொழிவு
நுவரெலியாவில் தற்போது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அதிகாலை நேரத்தில் இவ்வாறு பூப்பனி பெய்து வருகிறது என நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பூப்பனி பெய்துள்ளதை காண நுவரெலியாவுக்கு சென்றுள்ள தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலை நேரங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.