நாடாளுமன்ற வளாகத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் அருகே வந்த பாம்பு
நாடாளுமன்ற வளாகத்தின் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் அருகே சமீபத்தில் ஒரு நாகப்பாம்பு புகுந்தமையினால் பதற்றம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த நாகப்பாம்பை முதலில் நாடாளுமன்ற உதவி பணிப்பாளர் (நிதி) ரோஹித பத்மசிறி பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
அன்று மாலை அவர் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தக் நாகப்பாம்பைக் கண்டு, அது குறித்து நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளார்.
தியவன்னா ஓயா
பின்னர், பாதுகாப்புப் பிரிவினரால் அந்தக் நாகப்பாம்பு காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், சில காலமாக பல்வேறு பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற வளாகத்துக்கு விரியன் பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற பாம்புகள் வந்துள்ளன.

சுற்றியுள்ள பகுதியிலிருந்து தியவன்னா ஓயாவுக்கு வரும் பாம்புகள், நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளும் நுழைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri