கல்குடாவுக்கு கேரள கஞ்சா கடத்தி வந்த நபர் மடக்கிப்பிடிப்பு! (Photos)
பொலன்னறுவையிலிருந்து கல்குடாவுக்கு கேரள கஞ்சாவைக் கடத்தி வந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணியளவில் ஜெயந்தியா பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் நிறையுடைய இரு கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ச்சியாக கேரளா கஞ்சாவினை கல்குடாவுக்கு கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதுடன், பிரதான விநியோகத்தராகவும் செயற்பட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புலனாய்வுப்பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்காக முற்படுத்தப்படவுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan
