கையடக்கத் தொலைபேசி மூலம் போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் பணம் செலுத்துவதைத் தடுப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் நேற்று (31.1.2024) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம்
1,964 கையடக்க தொலைபேசி மூலம் பணம் வழங்கும் மையங்கள், 2,131 அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தொடர்பு மையங்கள், ரீலோட் மற்றும் பில் செலுத்தும் கையடக்க தொலைபேசி இயந்திரங்கள் அமைந்துள்ள 1,074 இடங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வணிக வங்கி கிளைகள் உள்ள 1,202 இடங்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
