யாழில் சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம்(Photo)
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று(31) சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
மந்திகை பொருள் நிரப்பு நிலையம் மற்றும் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் நேற்று காலை 11 மணி முதல் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் நேற்று முன்தினம் முதல் காத்திருந்தே நேற்று இரவு 9 மணி வரை காத்திருந்து பெட்ரோலை நிரப்பி சென்றதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் பெட்ரோல் பெற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
எரிபொருள் விநியோகம்

புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்ட போதும் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தும் இரவு 9 மணிக்குப் பின்னர் பெட்ரோல் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை குறித்த புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு தனியான வரிசையிலும் பெட்ரோல் வழங்கப்பட்டது.
வடமராட்சியில் உள்ள இரண்டு
எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் பாதுகாப்பு பணிகள் இடம்பெற்றன.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam