வெளிநாடொன்றில் விமானத்திலிருந்து திடீரென வெளியேறிய புகை - பீதியடைந்த பயணிகள்
ஜப்பானில் (japan) 200 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானத்திலிருந்து திடீரென புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை ஜப்பான் (Japan) பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இறக்கை பகுதியில் இருந்து புகை
ஜப்பான் நாட்டின் ஓல் நிப்பொன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் இதனால் பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஓயில் கசிவு காரணம்
மேலும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின் இறக்கை பகுதியில் இருந்து புகை வந்ததாகவும் என்ஜினை நிறுத்தம் செய்ததும் புகை நின்று விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓயில் கசிவு காரணமாக புகை வந்திருக்கலாம் என்றும் காக்பிட்டில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பில் ஓயில் அழுத்தம் குறைந்ததை காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |