வயல்களுக்கு வைத்த தீயால் புகைமூட்டம் – மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது நேற்று(02.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்து
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பெண் மற்றும் மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் வயல்களில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால் ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிரே வந்த வாகனங்கள் தென்படாமல் விபத்து ஏற்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 12 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan