இலங்கையில் மனித உரிமை மீறல் வழக்குகள்: அரசின் நடவடிக்கையில் தாமதம்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதியை நிலைநாட்டல்
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
என்றபோதிலும், மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்) எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத் தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும்.
நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 13 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam