சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
புதிய இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது
பரீட்சைக்கான முடிவுகள்
இதற்கமைய, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.
சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO..