இலங்கையில் அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்குமிடையில் வெடித்துள்ள சிறு போர்
இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் தங்களுக்கு உரிய நல்ல வாகனங்களோ அல்லது பிற வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
விசேட கூட்டம்
இந்த விவகாரம் தீவிரமாகியுள்ளதை அடுத்து, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று(04.09.2023) ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்காக இராஜாங்க அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தமது அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் இல்லை எனவும் பல பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர்கள் எதிர்கொள்கின்றனர்.
மேலும், நாளைய கூட்டத்திற்கு பின்னர் எந்த நேரத்திலும் சிறிய அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
