இலங்கை பொருளாதார இலக்குகளில் மந்தம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2024 ஆம் ஆண்டின் பொருளாதார மாற்றச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள மந்தகதி குறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம், நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.
சட்டத்தின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது தற்போது 16% என்ற அளவிலேயே உள்ளது.
முதலீட்டுக்கான இலக்குகள்
அந்நிய நேரடி முதலீட்டுக்கான இலக்குகள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன.

நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு மாற்றம் ஏதுமின்றி 6.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவே தொடர்கிறது.முதலீட்டுச் சபையுடன் தொடர்புடைய நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்தநிலையில், பொருளாதார மாற்றச் சட்டமானது தெளிவான இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், அதன் முன்னேற்ற அறிக்கைகள் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.