சத்தியாக்கிரகத்தில் மீண்டும் இணைந்த கஸ்ஸப தேரர்
கஸ்ஸப தேரர் மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17.10.2026) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பதற்றமான சூழ்நிலை
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சுயவிருப்பின் போில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (18.10.2026) தொடர்ந்து 3வது நாளாகவும் நீடிக்கிறது.
you may like this video