நானுஓயாவில் இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்
நானுஓயா-பெரகும்புர வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தும் நானுஓயாவிலிருந்து பெரகும்புர நோக்கி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எடின்புரோ தோட்ட முகாமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
