Techno 2025 கண்காட்சிக்கு பிரதான அனுசரணை வழங்கிய SLT-MOBITEL
பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியான Techno 2025இற்கு தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL பிரதான அனுசரணை வழங்கியுள்ளது.
இந்த கண்காட்சி நிகழ்வானது, ஒக்டோபர் 10 முதல் 12ஆம் திகதி வரை BMICHஇல் நடைபெற்றுள்ளது.
"Engineering for a Smart Nation" தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட Techno 2025, தேசத்தில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை பிரதிபலித்திருந்தது.
IESL உடனான இந்தப் பங்காண்மையினூடாக, நவீன புத்தாக்கங்கள் மற்றும் AI அப்ளிகேஷன்களை SLT-MOBITEL வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆற்றலையும் காண்பித்திருந்தது.
கண்காட்சி நிகழ்வு
SLT-MOBITEL பிரதான அனுசரணையாளர் எனும் வகையில், சமூகத்தின் சகல பிரிவுகள் மற்றும் பொருளாதாரத்தில் தொழில்நுட்பசார் முன்னேற்றத்துக்கு வலுவூட்டல், ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்பல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் போன்ற மூலோபாய நோக்கத்தை மீள உறுதி செய்திருந்தது.

தேசத்தின் மாபெரும் பொறியியல் மற்றும் தொழில்னுட்ப கண்காட்சியாக Techno 2025, SMART இலங்கையை கட்டியெழுப்புவதற்கான டிஜிட்டல் வலுவூட்டப்பட்ட மற்றும் எதிர்காலத்துக்கு தயாரான இலங்கையை ஊக்குவித்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் பரந்தளவு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பொறியியல் நிபுணர்கள் தொழில்முயற்சியாளர்கள். மாணவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் அடங்கியிருந்தனர். பல்வேறு பொறியியல் பிரிவுகளில் புரட்சிகரமான முன்னேற்றங்களை அவதானிப்பதில் அனைவரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில், சிறப்புமிக்க தொழில் துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு, இலங்கையில் பொறியியல் சிறப்பு மற்றும் புதுமைக்கான தங்கள் தொலைநோக்கு பார்வையை முன்வைத்த, ஊக்கமளிக்கும் நுண்ணறிவுகளும் இடம்பெற்றன.
இந்த சிந்தனையைத் தூண்டும் அமர்வுகள், தேசிய சவால்களை எதிர்கொள்வதிலும், பெருகிய முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பொருளுள்ள உரையாடலைத் தொடங்க வழிவகுத்தது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan