மகிந்த சிந்தனைக்கு ஆதரவளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு
மகிந்த சிந்தனைக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.
கட்சியின் அகில இலங்கை செயற்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை நேசிக்கும், நாட்டின் ஐக்கியத்தை கட்டிக் காக்கக்கூடிய ஒர் வேட்பாளருக்கு கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செயற்குழுக் கூட்டம்
விஜயராமாவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான இல்லத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தின் போது கட்சியின் தேசிய அழைப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் உறுப்பினர் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவது தொடர்பிலோ அல்லது அவர் பற்றியோ பேசப்படவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி! பரஸ்பர வரி உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி News Lankasri
