உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கும் மொட்டு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மேற்படி தேர்தலை எதிர்கொள்வதற்கான மொட்டுக் கட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையிலுள்ள மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. மொட்டுச் சின்னத்தில் களமிறங்கவே எதிர்பார்க்கின்றோம்.
பங்காளிக் கட்சிகள்
எனினும், வடக்கு, கிழக்கில் சிறு மாற்றம் வரலாம். பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம்.
எனினும், இவ்விரு மாகாணங்களிலும் சில இடங்களில் மொட்டுச் சின்னத்தில் வருவோம். ஏனைய மாவட்டங்களில் மொட்டுச் சின்னத்தின் கீழ் களமிறங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 46 நிமிடங்கள் முன்

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
