மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
புதிய இணைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார்.
கொழும்பு - நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் சற்றுமுன்னர் இதனை அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்படுவார் என கூறப்படுகின்றது.
இதேவேளை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று(07) அறிவிக்கப்படுவார் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானம் பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று(06) பத்தரமுல்லை, நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
