மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டை எதிர்க்கும் மொட்டு தரப்பு - செய்திகளின் தொகுப்பு
ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டினை மாற்றாவிடில் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த திங்கட்கிழமை (29) எடுத்த முடிவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுதியாகயிருந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |