பெயரளவுப் பதவிகளால் ஏமாற்றமடைந்துள்ள மொட்டுக் கட்சி
இராஜாங்க அமைச்சர்களுக்குரிய பல்வேறு வரப்பிரசாதங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நிறுத்தப்பட்டுள்ளமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அறியமுடிகின்றது.
நேற்று முன்தினம் பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களில் அதிகளவானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே.
இவர்களை விடவும் பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரை
இந்தநிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இராஜாங்க அமைச்சர்களுக்குரிய வரப்பிரசாதங்கள் பல நிறுத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
அது பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அறிய முடிகின்றது.
நேற்று முன்தினம் இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள், தமது இராஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவு தேவையில்லை என்று தெரிவித்திருந்த போதும், ஏனைய வரப்பிரசாதங்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.
பெரமுன இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி
இந்தநிலையில், அவர்கள் பலர் ஏற்கனவே அந்தந்த அமைச்சுக்களிடம் வாகனங்களைக் கோரியிருந்ததுடன், இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை காண்பித்து தமது வாகன உரிமைகள் மற்றும் அவற்றின் தேவைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
அவர்களின் கோரிக்கைக்கு அமைய புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இந்தநிலையில், ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரமுன
இராஜாங்க அமைச்சர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)