மரண வீட்டில் பெண் தொடர்பில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி
மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், பெண் உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
