பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு:கட்சியின் கூட்டத்தில் 21 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் கடந்த 26 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டதை பெரும்பாலான உறுப்பினர்கள் பகிஷ்கரித்து இருந்ததாக தெரிவருகிது.
பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு
இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக்கொண்டுள்ளனர்.
21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பொதுஜன பெரமுனவை சேர்ந்த பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளாதது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் அந்த கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக கூறியுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு என்னவாகும்?
அதேவேளை 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக நாளைய தினம் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான இந்த கூட்டம் நாளைய தினம் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கூட்டியுள்ள இந்த கூட்டத்திலும் பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.